வேதாகமம் திருத்தப்பட்டுவிட்டது என்ற இஸ்லாமிய குற்றச்சாட்டிற்கான

கண்ணியமான பதில்

கண்ணியமான பதில் என்ற இப்புத்தகம் பைபிள் பிழையானது மற்றும்/ அல்லது பைபிள் திருத்தப்பட்டுவிட்டது என்று 1200 வருடங்களுக்கும் அதிகமாக முஸ்லீம்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டிற்கு அறிவார்ந்த பதில் தரும் புத்தகம் ஆகும். இந்த பதிப்பில் முக்கியமான பதங்கள் மற்றும் விளக்கங்கள் அதன் மூல மொழியான எபிரேயம், கிரேக்க மற்றும் அரபி மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

விவாதங்களில் ஈடுபடும் முஸ்லீம்கள் வேதாகமம் திருத்தப்பட்டுவிட்டது என்ற முஸ்லீம்களின் வழக்கமான குற்றச்சாட்டுக்கு வலுசேர்ப்பதற்காக மேற்கத்திய வேதாகம விமர்சனங்களில் இருந்து தங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் எடுத்து பயன்படுத்துகின்றனர். குர்’ஆன் பற்றிய கேள்விகள் குறைந்தபட்சம் வேதாகமத்தைப் பற்றிய கேள்விகள் போலவே சவாலானவை என்பதைக் காண்பிப்பதற்காக வேதாகமத்தையும் குர்’ஆனையும் அறிவார்ந்த உரையாடல் களத்தில் வைப்பதன் மூலமாக முஸ்லீம்களின் குற்றச்சாட்டிற்கு கண்ணியமான பதில் புத்தகம் பதில் தருகிறது.

கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த பண்டைய கைப்பிரதிகள் பற்றிய ஆச்சரியமான கண்டுபிடிப்புகள் மற்றும் சான்றுகள் பற்றிய நிபுணர்களின் ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் வேதாகமத்தின் நம்பகத்தன்மைக்கு ஆதரவான வாதங்களை இப்புத்தகம் தருகிறது. மேலும் குர்'ஆன் மீதான முக்கியமான ஆராய்ச்சியின் வளர்ச்சியையும், முஸ்லீம்களின் புனிதநூலின் உள்ளடக்கம் மற்றும் அதன் தோற்றம் பற்றி அவை எழுப்பும் கேள்விகளையும் இந்த புத்தகம் மதிப்பீடு செய்கிறது. கண்ணியமான பதில் என்ற இப்புத்தகத்தின் கடைசி பிரிவு மரியாதையான மற்றும் அமைதியான சூழலில் திறந்த மனதுடன் நம்பிக்கை பற்றிய உரையாடலுக்கு நட்பு ரீதியிலான ஒரு அழைப்பு ஆகும்.

 

விரைவில் வெளியாகும்​